Buy this book

இதழியல் துறை தொடர்பான பல்வேறு அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கி; வெளிவருகின்றது
மக்களின் வாழ்வின் சவால்களை கோடிட்டுக்காட்டும் ஊடகங்கள் நடுநிலைநின்று பொறுப்புடனும் தூரநோக்குடனும் மானிடத்தின் இருப்புக்கு உதவுவதாக இருக்க வேண்டும். அன்றாட விடயங்களை மாத்திரம் வெளிக்கொண்டுவருவது என்பதற்கு அப்பால் எது உண்மையானது? எது நல்லது? எது தேவையானது? என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதுடன் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியதையும் செய்திகளுடன் இணைத்துக் கொள்ளவேண்டும்.
அவ்வாறானதொரு இதழியல் துறை வளர்ச்சிக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் பாடுபடுகின்றது. வெளிவருகின்ற இந்த ஆக்கம் ஊடகப்பயிற்சிக்கு உரியதாகும். இதழியல் துறை தொடர்பான பல்வேறு அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கி; வெளிவருகின்றது.
ஊடக வளங்கள் பயிற்சி மையம் சிறுவர்கள் சார்பாகவும், பெண்கள் சார்பாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகவும் மனித உரிமைகள் சார்பாகவும் ‘காய்தல், உவத்தல் இன்றி’’ பயிற்சியையையும் ஆய்வுப்பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் கட்புலக் காட்சிகளாகத் தொகுத்தும் தந்ததனூடாக தன்னை அடையாளப்படுத்தியதோடு ஆக்கமான காரியங்களைச் செய்துள்ளது என்பது பெருமைதரக்கூடிய ஒன்றாக உள்ளது.
நூலாசிரியர் தே.தேவானந்த் தனது கல்விப்புலமை. பல்வேறு நாடுகளில் ஊடகத்துறையில் பெற்ற பயிற்சி மற்றும் பயிற்சியாளராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றிய அனுபவம் எல்லாவற்றையும் தொகுத்து எளிமையான முறையில் இந்த நூலை தந்துள்ளார். .தேவானந்த் தனக்கு கொடுத்த பொறுப்பைச் எப்போதும் சரிவரச் செய்து முடிக்கும் பண்பு கொண்டவர். இவ்வாக்கம் அதற்கு ஒரு சான்றாகும்.
ஊடகவளங்கள் பயிற்சி மையத்தால் வெளியிடப்படும் இவ்வாக்கத்திற்கு ஊக்கமும் உதவியும் அளிப்பது பல்கலைக்கழகத்தின் கடமையாகும்.
நன்றி
பேராசிரியர் வி.பி. சிவநாதன்
பீடாதிபதி,
கலைப்பீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Buy this book

Edition | Availability |
---|---|
1 |
aaaa
|
Book Details
Edition Notes
The Physical Object
Edition Identifiers
Work Identifiers
Community Reviews (0)
History
- Created April 26, 2014
- 4 revisions
Wikipedia citation
×CloseCopy and paste this code into your Wikipedia page. Need help?
April 26, 2014 | Edited by Thevanayagam Thevananth | Edited without comment. |
April 26, 2014 | Edited by Thevanayagam Thevananth | This is the very first book in tamil journalism speaks about basic of journalism in srilanka |
April 26, 2014 | Edited by Thevanayagam Thevananth | Added new cover |
April 26, 2014 | Created by Thevanayagam Thevananth | Added new book. |